இன்றைய நாள் ஓய்வு நாள் என்று நினைக்காமல் உங்கள் வாழ்க்கையில் முக்கியமான நாள் என்று நினையுங்கள்.
அதனால் எல்லோரும் வாக்களிக்க வேண்டும். அதனை எல்லோரும் செய்வார்கள் என்றும் நம்புகிறேன்.
ஓட்டு என்கிற ஒரு விஷயம் மட்டும்தான் நாம் அனைவரும் கிடைக்கும் சமமான ஒன்றாக இருக்கிறது.
ஏழையாக இருந்தாலும் ஒரு ஓட்டுதான், பணகாரராக இருந்தாலும் ஒரு ஓட்டுதான்.

வேட்பாளர்கள் யார், யார் என்று தெரிந்துகொண்டுதான் வாக்களிக்க வந்தேன். என் கடமையைச் சரியாகச் செய்திருக்கிறேன்.
மிகவும் எக்சைட்டிங்கான தேர்தலாக இது இருக்கிறது. இந்தத் தேர்தலில்தான் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க நானும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.