ஆட்சி மாற்றம் “No Need” என அஜித் சொல்லவில்லை: வதந்தி செய்திக்கு முற்றுப்புள்ளி! – Kumudam

Spread the love

இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்குமார் தனது வாக்கினைப் பதிவு செய்தார். நடிகர் அஜித் குமார் முதல் ஆளாக தனது வாக்கினை செலுத்தி விட்டுச் சென்றார். மீடியாக்கள் மைக் நீட்டும் போது கூட அவர் அவற்றை கண்டுக் கொள்ளாமல் கடந்து சென்ற வீடியோக்கள் தான் வெளியாகின. ஆனால், திடீரென அஜித் குமாரிடம் மாற்றம் வேண்டுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதாகவும் “No Need” என அவர் சொன்னதாகவும் சில செய்தி நிறுவனங்கள் கார்டு போட்டதாக வதந்திகள் பரவின.

அஜித் கருத்து குறித்து  முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டதற்கு வரவேற்றதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் தீயாய்ப் பரவின. ஆனால், அஜித் அத்தகைய எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

தவறாகச் சித்திரிக்கப்பட்ட பதில்

இது குறித்து விளக்கம் அளித்துள்ள சுரேஷ் சந்திரா, “அஜித்திடம் செய்தியாளர் கேள்வி கேட்டபோது, அவர் பேட்டி அளிக்க விரும்பவில்லை என்பதையே ‘தேவையில்லை’ (No Need) எனக் குறிப்பிட்டார். அதாவது, பேட்டி அளிக்க முடியாது என்ற அர்த்தத்திலேயே அவர் அவ்வாறு கூறினார். ஆனால், ஒரு குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி அதனை அரசியல் மாற்றத்திற்கான பதிலாகத் தவறாகச் சித்திரித்துச் செய்தியாக வெளியிட்டுவிட்டது” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

வாக்குச்சாவடியில் ஏற்பட்ட நெரிசல்

முன்னதாக, காலை 6:50 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வந்த அஜித்தைக் காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். “வாழு வாழ விடு” என ரசிகர்கள் கோஷமிட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசல் மற்றும் சத்தத்தால் சற்று அசௌகரியமாக உணர்ந்த அஜித், தனது காதுகளைக் கைகளால் பொத்திக்கொண்டு அமைதியாக அங்கிருந்து வெளியேறினார். எந்தவித அரசியல் கருத்தையும் அவர் பொதுவெளியில் முன்வைக்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *