அரசு ஆய்வு கூட்டத்தில் தவெக மா. செ; வெடித்த கோஷ்டி மோதல்; பேசுபொருளான அமைச்சரின் திண்டுக்கல் விசிட்!

Spread the love

இதனால் அமைச்சரைப் பார்க்க வந்தவர்களுக்கும், கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஹோட்டல் உள்ளேயே அமைச்சரைப் பார்க்க வந்த திண்டுக்கல் தொகுதி த.வெ.க வேட்பாளர் நசீர் ராஜா பிரிவைச் சேர்ந்த தொண்டர்கள் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில், `எங்கள்மீது கை வைத்த மாவட்டச் செயலாளரை மாற்ற வேண்டும்” என்றும், `அவதூறாகப் பேசிய மாவட்டச் செயலாளரை மாற்று’ என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர்  அமைச்சரைப் பார்க்க ஏற்பாடு செய்வதாக கூறி, சமதானப்படுத்தினர்

அமைச்சர் விக்னேஷ்

அமைச்சர் விக்னேஷ்

தொடர்ந்து மாலையில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்த இந்த ஆய்வுக் கூட்டத்தில், திண்டுக்கல் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம், கரூர் எம்.பி., ஜோதிமணி, நிலகோட்டை எம்.எல்.ஏ அய்யனார், மாவட்ட எஸ்.பி., பிரதீப் மற்றும் அதிகாரிகள்  உள்ளிட்டோர் அமர்ந்திருந்த வரிசையில், தவெக மாவட்டச் செயலாளர் தர்மாவிற்கும் இடம் அளிக்கப்பட்டிருந்தது.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்கக்கூடிய கூட்டத்தில் எந்த அடிப்படையில் மாவட்டச் செயலாளர் அமர்ந்திருந்தார் என்ற பேச்சுகள் கூட்டத்திற்குள் இருந்த அதிகாரிகளிடையே எழுந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *