அரசு ஓடிடி தளம் சாத்தியமா? லாபமா, நஷ்டமா? விரிவான அலசல் Government OTT Platform: Can It Compete With Netflix & Prime?

Spread the love

அரசு ஓடிடி வெற்றி பெற என்ன செய்யலாம்?

அரசு ஓடிடி வெற்றி பெற வேண்டுமெனில், அது தனியார் வணிக நிறுவனங்களை நகலெடுக்காமல், புதிய வியூகங்களைக் கையாள வேண்டும். முழு சந்தா முறைக்கு மாறாக, குறிப்பிட்ட கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறை (TVOD – Transactional Video on Demand), விளம்பரங்கள் மூலம் இலவசமாகப் பார்க்கும் (AVOD) கலவையை உருவாக்க வேண்டும். திரையரங்குகளில் வெளியாகி 60 அல்லது 90 நாள்களுக்குப் பிறகு மட்டுமே அரசு ஓடிடிக்கு படங்கள் வர வேண்டும் என்ற விதிமுறையை வகுத்தால், தியேட்டர் தொழிலும் பாதிக்கப்படாது.

புதிதாக இணைந்துள்ள நான்கு மொழித் தயாரிப்பாளர் சங்கங்களுடன் அரசு கைக்கோத்து, ஒரு கூட்டுறவு ஓடிடி தளம் போல உருவாக்கலாம். இதில் அரசு தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வழங்க, தயாரிப்பாளர்கள் உள்ளடக்கத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். சினிமா மட்டுமல்லாது பள்ளி-கல்லூரி பாடத்திட்ட வீடியோக்கள், போட்டித் தேர்வு பயிற்சிகள், அரசு வரலாற்று ஆவணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

அரசு ஓடிடி

அரசு ஓடிடி

தென்னிந்தியத் திரைப்பட அமைப்புகள் ஒன்றிணைந்துள்ள சூழலில், அரசு தொடங்கக்கூடிய ஓடிடி என்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்திற்கு எதிரான ஓர் ஆரோக்கியமான மாற்று ஜனநாயக மேடையாக இருக்க முடியும். ஆனால், சினிமா விநியோகஸ்தராகவோ அல்லது வியாபாரியாகவோ அரசு மாற நினைத்தால் அது பொருளாதார ரீதியாகப் பின்னடைவையே தரும். ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துகள், சர்ச்சைக்குரிய கதைகளை அரசு தளம் அனுமதிக்குமா என்ற கேள்வியும் எழுவதைத் தவிர்க்க முடியாது.

மாறாக, இவற்றையெல்லாம் தாண்டி தயாரிப்பாளர்களின் கூட்டுறவு அமைப்பாகவும், தரமான படைப்புகளுக்கு வாழ்வளிக்கும் களமாகவும் இயங்கினால் அரசு ஓடிடி மக்கள் மத்தியிலும் திரையுலகிலும் காலத்துக்கேற்ப காலம் கடந்தும் நிலைத்து நிற்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *