அரிசி விலை அதிகரிக்க இதுதான் காரணம் – பின்னணி பகிரும் ரைஸ்மில் உரிமையாளர்!| Rice Price Hike: Rice Mill Owner Explains the Reasons

Spread the love

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக அரிசியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.55 -க்கு விற்கப்பட்டது இன்று ரூ.75 ஆகவும், 26 கிலோ மூட்டை ரூ. 700 வரை விலை உயர்ந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் , ” முதலமைச்சர் அவர்கள் லண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார், போகட்டும்…அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டுப்போய் விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். தயவு செய்து மாண்புமிகு உணவுத் துறை அமைச்சரிடம் கேட்டு விட வேண்டாம். அவர் எல்லாம் “நார்மலாக’ இருக்கிறது என்பார். மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்குப் பதிலாக பயத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்” என்று முதல்வரை விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் வெங்கட் ரமணன் பேசுகையில், ” விலைவாசி உயர்வில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்பதை கடந்த 5 ஆண்டுகாலப் புள்ளிவிவரங்களோடும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கிராமப்புறங்களில் 90% மக்கள் ரேஷன் அரிசியை வாங்கித் தான் பயன்படுத்துகிறார்கள். நகர்ப்புறங்களில் தான் விலைவாசி உயர்வு தெரிகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *