அரியலூர்: காணாமல் போன 3 வயது சிறுமி – 5 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி!

Spread the love

அரியலூர் மாவட்டம், புங்கங்குழி ஊராட்சிக்குட்பட்ட சிலுப்பனுர் கிராமத்தில் வசிப்பவர்கள் மணிமாறன்-சரிதா தம்பதி. இவர்களது மூன்று வயது பெண் குழந்தை நிவிஷ்னா. நேற்று தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை மதியம் சுமார் 4 மணியிலிருந்து காணவில்லை என சொல்கிறார்கள்.

காணாமல் போன சிறுமி

காணாமல் போன சிறுமி

இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் பதறியபடி சிறுமியை தேடி வந்துள்ளனர். இதில் இரவு பத்து மணியளவில் குடியிருப்புக்கு அருகில் உள்ள புதர் மண்டிய குளத்தில் சிறுமி சடலமாக கிடப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதைப்பார்த்த அவரின் பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *