கிரிக்கெட் வீரர் தோனியின் புகைப்படங்கள், கிரிக்கெட் உபகரணங்கள் வைத்து மதுரையில் சிறப்பு பூஜை! | Special puja held in Madurai featuring photographs of cricketer Dhoni and his cricket equipment!

Spread the love

இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழ்ந்த மகேந்திர சிங் தோனி, 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். தனது தலைமையில் 2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை, 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என மூன்று முக்கிய ஐசிசி கோப்பைகளை இந்திய அணிக்குப் பெற்றுத் தந்தவர்.

குறிப்பாக, 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அடித்த வெற்றிக்கான சிக்ஸர் இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களின் நினைவில் நீங்காமல் உள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் தோனிக்காக பிரார்த்தனை

கிரிக்கெட் வீரர் தோனிக்காக பிரார்த்தனை

இந்நிலையில், மகேந்திர சிங் தோனி உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி, மதுரை கூடல்புதூர் பகுதியில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா ஆலயத்தில் சிறப்புப் பூஜை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.

இதற்காக ஆலயத்தில் மகேந்திர சிங் தோனியின் புகைப்படங்கள் வைக்கப்பட்டதுடன், கிரிக்கெட் விளையாட்டின் அடையாளமாக கிரிக்கெட் பேட் உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களும் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *