இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உடன் நடித்துத் தயாரிக்க இருந்த திரைப்படம் கைவிடப்படுகிறது என்று நடிகர் மற்றும் இயக்குநர் விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“அருண்ராஜா காமராஜுடன் நான் இணையவிருக்கும் அடுத்த படம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன.
இதைப் பற்றிப் தெளிவுபடுத்தி, தற்போதைய நிலவரத்தை ரசிகர்களுக்குத் தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன் – ஏனெனில் அதைத் தெரிந்துகொள்ளும் உரிமை உங்களுக்கு உண்டு.

கடந்த ஓராண்டாக நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த திட்டங்களில் இதுவும் ஒன்று. இதற்காகக் கடந்த பத்து மாதங்களாக தீவிரமாகத் தயாராகி வந்தேன்.
“கட்டா குஸ்தி 2′ படப்பிடிப்புக்குப் பிறகு இந்தப் படத்தை தொடங்கலாம் என்று நம்பியிருந்தேன். இதைத் திரைக்குக் கொண்டுவர மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
ஆனால் துரதிஷ்டவசமாக, சமீபகாலமாக இயக்குநருடன் ஏற்பட்ட படைப்பு ரீதியான கருத்து வேறுபாடுகள் மற்றும் பட்ஜெட் பிரச்னைகள் காரணமாக இந்தத் திட்டம் முடங்கியுள்ளது.
உண்மையைக் சொல்லப்போனால், பட்ஜெட் கட்டுப்பாடு என்பது தற்போது திரைத்துறை சந்தித்து வரும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.