"இதுவரை அமித் ஷா இப்படி செய்ததே இல்லை; அவர்களுக்கிடையே பிரச்னையா?" – காங்கிரஸ் கேள்வி

Spread the love

ஜூலை 20-ம் தேதியில் இருந்து இதுவரை நாடாளுமன்றத்தில் 17 அமர்வுகள் நடந்துவிட்டன. ஆனால், முதல் அமர்வைத் தவிர, மீதி அமர்வுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொள்ளவில்லை.

இதற்கு முக்கிய காரணம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வரும் கேள்வி – நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது?

இன்றும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அமித் ஷா கலந்துகொள்ளவில்லை.

இதை சாடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ்.

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

“செய்திகளைப் பரப்பி, விவாதத்தின் போக்கை மாற்ற முயற்சிக்கும் அனைத்துத் தீவிர முயற்சிகளுக்குப் பிறகும், மத்திய உள்துறை அமைச்சர் இன்றைக்கும் மக்களவைக்கு வரவில்லை – அவரது பெயரில் அலுவல்கள் பட்டியலிடப்பட்டிருந்த போதிலும்!

மிரட்டுபவர்கள் உண்மையில் கோழைகள்தான் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

கடந்த 17 நாள்களாக அமித் ஷா அவர்கள் மக்களவையிலும் சரி, மாநிலங்களவையிலும் சரி ஆஜராகாமல் இருப்பது உண்மையிலேயே இதுவரை கண்டிராத ஒன்றாகும்.

இதனால் இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது: அவர் நலமாக இருக்கிறாரா? # 1 மற்றும் # 2 இடங்களுக்கு இடையே எல்லாம் சரியாகத்தான் இருக்கிறதா?

இதனை நாடு அறிய விரும்புகிறது”.

இங்கே ஜெய்ராம் ரமேஷ் # 1 மற்றும் # 2 என்று குறிப்பிட்டிருப்பது முறையே இந்திய பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *