அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. தாராபுரத்தில் செல்ஃப் எடுக்காத தவெக.. விஜய்யை கவுக்கும் சீனியர்! | Sengottaiyan: Minister Sengottaiyan Distances Himself From Dharapuram Bypoll Campaign After Arunraj Appointment

Spread the love

Tamilnadu

oi-Yogeshwaran Moorthi

திருப்பூர்: தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் சூழலில், அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. அமைச்சர் அருண்ராஜ்ஜை பொறுப்பாளராக தவெக தலைமை நியமித்துள்ளதால், செங்கோட்டையன் தேர்தல் பணியில் தீவிரமாக இல்லை. இந்த தொகுதியில் தவெக தோல்வி அடைந்தால், அருண்ராஜ்ஜை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டிவிடலாம் என்று செங்கோட்டையன் கணக்கு போட்டுள்ளதாகவும் முனுமுனுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் தவெக உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர். ஆனால் தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவே அதிர்ச்சியிலும், சோகத்திலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. சத்தியபாமா செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Sengottaiyan

இதனால் தவெக அமைச்சர்கள் அருண்ராஜ் என்ன செய்வதென புரியாமல் தடுமாறி வருகிறார். இன்னொரு பக்கம் அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. கொங்கு மண்டல பொறுப்பாளரான தாம் இருக்கும் போது, எப்படி அருண்ராஜ்ஜை தாராபுரம் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கலாம் என்று செங்கோட்டையன் அதிருப்தியில் இருக்கிறார்.

அதேபோல் சமூக ரீதியிலான கணக்குகளை எப்படி தங்கள் பக்கம் திருப்புவது என்பது தெரியாமல் அருண்ராஜ் திணறி வருகிறார். நாட்டு கவுண்டரான அருண்ராஜ்ஜை, கொங்கு வேளாளர் கவுண்டர் மக்கள் ஏற்க மறுக்கின்றனர். இந்த தொகுதியில் 95 ஆயிரம் வாக்குகள் கொங்கு வேளாளர் கவுண்டர் மக்கள் இருக்கின்றனர். இதன்பின் தலித் வாக்குகள் அதிகளவில் இருக்கிறது.

தலித் வாக்குகளை திமுக மற்றும் தவெக சரி பாதியாக பங்கு போடுகிறது. இதனால் கொங்கு வேளாளர் கவுண்டர் வாக்குகளை கைப்பற்றும் கட்சியே தாராபுரத்தில் வெல்ல முடியும். அதனை அதிமுக சரியாக செய்து வருகிறது. அதேபோல் அமைச்சரவையில் அருண்ராஜ்ஜுக்கு பின் தான் செங்கோட்டையன் இருக்கிறார்.

தாராபுரம் தொகுதியில் தவெக தோல்வி அடைந்தால், விஜய்க்கு நெருக்கமாக இருக்கும் அருண்ராஜ் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்படுவார். இதன் மூலமாக விஜய்யுடன் கூடுதலாக நெருக்கம் காட்ட முடியும் என்றும் செங்கோட்டையன் கணக்கு போடுகிறார். தாராபுரம் தொகுதியில் விஜய் நேரடியாக பிரச்சாரம் செய்தாலும் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லாத சூழல் நிலவு வருகிறது.

இன்னொரு பக்கம் வேட்பாளர் திலகபாமாவை பிரச்சாரத்திற்கு அனுப்பவும் செங்கோட்டையன் தடையாக இருக்கிறார். முதல்வர் விஜய் ஒருநாள் வந்தாலே போதும் என்று ஆதரவாளர்களிடம் பேசி வருகிறார். இதனால் தொகுதியில் அனைத்து தரப்பினரையும் சந்தித்து வாக்கு கேட்கவே சத்தியபாமாவுக்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *