கேரள திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கல் கண்ணூரில் விற்ற லாட்டரிக்கு ரூ.30 கோடி பம்பர் பரிசு! | Kerala Thiruvonam Bumper Lottery Draw: ₹30 Crore Bumper Prize for Ticket Sold in Kannur!

Spread the love

கேரள அரசின் லாட்டரித்துறை சார்பில் சித்திரை விஷூ, ஆயுதபூஜை, திருவோணம் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பம்பர் பரிசுகளுடன் கூடிய லாட்டரி வெளியிட்டு விற்பனை செய்வது வழக்கம்.

கடந்தமுறை வரை ஓணம் பண்டிகைக்கு 25 கோடி ரூபாய் பம்பர் பரிசு அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு 30 கோடி ரூபாய் பம்பர் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த முறை ஓணம் சிறப்பு லாட்டரி 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன.

ஒரு டிக்கெட் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அச்சிடப்பட்ட அனைத்து லாட்டரிச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. பாலக்காடு மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 20 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாயின. 2026-ம் ஆண்டுக்கான திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கல் இன்று திருவனந்தபுரம் கார்கி பவனில் அமைச்சர் கே.முரளிதரன் முன்னிலையில் நடந்தது.

ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல்

ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல்

அதில் TL 360615 என்ற எண் கொண்ட லாட்டரி ரூ.30 கோடி பம்பர் பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அதிர்ஷ்ட டிக்கெட் கண்ணூர் மாவட்டத்தில் விற்பனையானது தெரியவந்துள்ளது. பரிசுபெற்ற அதிஷ்டசாலி யார் என்பது இதுவரை தெரியவில்லை. அவரை கேரளமே தேடி வருகிறது.

இரண்டாம் பரிசு தலா ரூ.1 கோடி வீதம் 20 பேருக்கு வழங்கப்படுகிறது. ஒருகோடி ரூபாய் பரிசுபெற்ற 3 டிக்கெட்டுகள் பழவங்காடி, கல்லம்பலம், வைட்டிலா ஆகிய பகுதிகளில் உள்ள பகவதி ஏஜென்சி மூலம் விற்பனையாகியுள்ளன. ​

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *