டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் ஆசிரியர்களில் ஒருவரான அருண் ராம், `Hero”s silence, party’s shame: Joseph Vijay’s reluctance to reign in unruly elements is harming TVK and govt’ என்ற தலைப்பில், “தமிழ்நாட்டில் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தவெக நிர்வாகிகளின் பட்டியல் அதிகரித்து வருவது ஒரு சங்கடமான கேள்வியை எழுப்புகிறது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது சொந்தக் கட்சியைப் பொறுப்பேற்கச் செய்யத் தயாராக இருக்கிறாரா?” எனக் கேள்வி எழுப்பி நீண்டக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

அதைத் தொடர்ந்து அருண் ராம் தன் எக்ஸ் பக்கத்தில், “கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் த.வெ.க (TVK) நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காததற்காக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து நான் எழுதிய கட்டுரை வெளியான அடுத்த நாளே, இன்ஸ்டாகிராமிலிருந்து எனக்கு ஒரு அறிவிப்பு வந்துள்ளது. அதில், இந்தப் பதிவு (ஜூலை 21 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா (TOI) குழு முதலமைச்சரைச் சந்தித்த புகைப்படங்கள்) “சட்டப்பூர்வ தேவைகளுக்கு இணங்க” இந்தியாவில் கிடைக்கப்பெறாது (முடக்கப்பட்டுள்ளது) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #interesting” எனப் பதிவிட்டிருக்கிறார்.