OM: “முதல்வர் விஜய்க்கு நன்றி; ரசிகர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்" – நடிகர் தனுஷ்

Spread the love

தமிழ்நாட்டில் 2023-ம் ஆண்டுக்கு முன்பு அதிகாலை சிறப்பு காட்சி நடைமுறையில் இருந்தது. இது படம் வெளியாகும் முதல் சில நாட்களுக்கு தயாரிப்பு நிறுவனம் கேட்கும் பொருட்டு நள்ளிரவு 1 மணி காட்சி, அதிகாலை 4 மற்றும் 6 மணிக் காட்சி வரையறுக்கப்பட்டது. ஆனால் 2023ம் ஆண்டு துணிவு – வாரிசு ஆகிய படங்களின் வெளியீட்டின் போது ஒரு ரசிகர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், காலை 6 மணி முதல் காட்சி தொடங்க தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட திரைத்துறையினர் சங்கங்கள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் சமீபத்தில் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்திலிருந்து காலை 6 மணி சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

தனுஷ் பதிவு
தனுஷ் பதிவு

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகரும், இயக்குநருமான தனுஷ் தன் எக்ஸ் பக்கத்தில், “ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலரின் கூட்டு உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவாவது. அத்தகைய திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு, திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பதும், அதன் மூலம் திரையுலகின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதும்தான்.

வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் “ஓம்”திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கும், மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். காலை 6 மணி காட்சிக்கு வருகை தரும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புடனும், பொறுப்புடனும், அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். திரைப்படத்தைப் பார்த்து மகிழ்வதே உண்மையான கொண்டாட்டம்! அனைவருக்கும் அன்பும், நன்றியும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *