“அவரது கதாபாத்திரங்கள் சினிமாவிற்கு வர நினைக்கும் இளம் பெண்களுக்கு.!”- மமிதா குறித்து சூர்யா| surya about mamita baiju in kerala event

Spread the love

சூர்யாவின் “விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.

‘லக்கி பாஸ்கர்’ படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

 'விஸ்வநாத் & சன்ஸ்'

‘விஸ்வநாத் & சன்ஸ்’

அந்தவகையில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ” கேரளா எப்போதும் கடவுளின் தேசம் என்று சொல்வார்கள். நான் அன்பின் தேசம் என்று தான் சொல்லுவேன்.

20 வருடங்களுக்கு முன்பு இந்த அன்பு இங்கு ரெஜிஸ்டர் ஆனது. உங்கள் அன்பைத் தொடர்ந்துக் கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்.

இந்த அன்பு என்னைப் பொறுத்தவரைக்கும் லைஃப் டைம் செட்டில்மென்ட். இதற்கு நான் எவ்வளவு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *