“அவரால்தான் ‘அன்பே டயானா’ நடந்தது!” – விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன பாரி இளவழகன் | Director Pari Elavazhagan Emotional Speech At Anbe Diana Thanks Meet

Spread the love

தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. இந்தப் படத்திற்கு நிறைய ஆப்ஷன்கள் இருந்தும், இதில் நான்தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்தேன். அதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார்.

‘அன்பே டயானா’ படத்தில் நான் எழுதிய ஒரு வசனத்தையோ, ஒரு காட்சியையோ மாற்ற வேண்டும் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. என் எழுத்தையும், என் பார்வையையும் முழுமையாக நம்பி எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். அந்த நம்பிக்கைக்காக அவருக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.

கோபி, ‘பெங்களூரு பாபா’ கதாபாத்திரத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்பினேன். இன்று ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரோஜா மேம் இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்ததே எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.

ஒரு சிறிய படக்குழுவிற்கு அவர் அளித்த ஆதரவு எங்களுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. ரம்யா ரங்கநாதன் கடைசி நேரத்தில் இந்தப் படத்தில் இணைந்திருந்தாலும், அவர் உழைப்பு அளவிட முடியாதது. பலரும் என்னிடம், ‘ஏன் அன்பே மேஜிக் என்று தலைப்பு வைக்காமல் அன்பே டயானா என்று வைத்தீர்கள்?’ என்று கேட்டார்கள்.

‘மேஜிக்’ என்ற வார்த்தை படத்தின் உள்ளே மட்டுமே சிறப்பாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதைத் தலைப்பாக வைக்கவில்லை. கதை எழுதும்போதே அந்த வார்த்தை ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்படும் என்று நான் நம்பினேன். இன்று ரசிகர்கள் அந்தக் கதாபாத்திரத்தை ‘மேஜிக்’ என்றே கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதற்கு ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” எனப் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *