NEET Protest: Supreme Court Slams Delhi Police Over Lathi Charge on Peaceful Protesters | நீட் போராட்டத்தில் போலீஸாரின் செயல்: `சட்டம் தன் கடமையைச் செய்யும்’ – அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்

Spread the love

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்: “போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. ஆனால், இந்த போராட்டத்தை முதலீடாக வைத்து உள்ளே புகுந்த குற்றப்பின்னணி கொண்ட சமூக விரோதிகளும், பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடையவர்களுமே வன்முறையைத் தூண்டிவிட்டனர்” என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தச் சம்பவங்களில் 250-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் படுகாயமடைந்துள்ளனர். காவல்துறையின் மனஉறுதியைக் குலைக்கும் வகையில் எந்த உத்தரவும் அமைந்துவிடக் கூடாது. இந்த விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய அரசே முன்வந்து அனைத்துத் தரவுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்” எனத் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கில் பல முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தனர். உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவுகள் இதோ:

சம்பவம் நடந்த பகுதிகளில் பதிவான அனைத்து சிசிடிவி (CCTV) காட்சிகள், ட்ரோன் (Drone) வீடியோக்கள், பாடி கேமரா (Body Camera) பதிவுகள் மற்றும் பிசிஆர் (PCR) அழைப்பு விவரங்களை எவ்விதச் சேதமுமின்றிப் பாதுகாக்க வேண்டும்.

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களின் புகைப்படங்கள், முகவரி உள்ளிட்ட தனிநபர் விவரங்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகளைப் பொதுவெளியில் கசியவிடக் கூடாது.

குற்றப்பின்னணி எதுவும் இல்லாத மாணவர்கள் மீது எவ்விதக் கடுமையான நடவடிக்கையோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கையோ எடுக்கப்படக் கூடாது.

பீகார் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் காவலில் அடைக்கப்பட்டுள்ள 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

டெல்லி, மகாராஷ்டிரா, பீகார், கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இறுதியாக, “ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவதற்கான உரிமை அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தனது வரம்பை மீறிச் செயல்பட்டிருந்தால், சட்டம் தன் கடமையைச் செய்யும்” என தலைமை நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அனைத்து மாநில அரசுகளின் அறிக்கைகளும் வரப்பெற்ற பிறகு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறி, வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *