‘பழைய ஆளுங்கள தூக்குங்க!’ செம்மலைக்கு செங்ஸ் கொடுத்த அசைன்மென்ட்…சிதறுமா சேலம் அ.தி.மு.க? – Kumudam

Spread the love

தி.மு.க. முக்கியப் புள்ளிகளில் ஒருவராக வலம்வந்த முன்னாள் அமைச்சர் செம்மலை, த.வெ.க.வில் சேர்ந்த கையோடு அ.தி.மு.க.வின் பழைய கைகள் அனைவரையும் தூக்கச் சொல்லி, அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்ட்மென்டால் சலசலத்துக் கிடக்கிறது சேலம் அ.தி.மு.க.

இதுகுறித்த விவரம் அறிந்தவர்களிடம் பேசினோம். “எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுகவுக்கு வந்து, ஜெயலலிதா ஆசியால் சேலம் அ.தி.மு.க.வின் முக்கிய அங்கமாக இருந்தவர் செம்மலை. 1980ல் தாரமங்கலம் தொகுதியில் சுயேட்சையாய் நின்று ஜெயித்து, எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். தொடர்ந்து, மா.செ. 

எம்.பி. அமைச்சர்னு படிப்படியா வளர்ந்து, கொங்கு அ.தி.மு.க.வின் தவிர்க்க முடியாத நபரா செம்மலை மாறினார். ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு கூவத்தூர் சம்பவம் நடந்தது. எடப்பாடி முதலமைச்சர் என்று பேச்சு அடிபட, சசிகலாவின் ஆதரவாளரான செம்மலை சுவர் ஏறி குதிச்சுப் போய் எதிர்ப்பு தெரிவிச்சார். பிறகு ஓ.பி.எஸ். அணியில் பயணிச்சார்.

ஒரு கட்டத்தில், இ.பி.எஸ். ஓ.பி.எஸ். அணிகள் இணைஞ்ச பிறகு எடப்பாடியோடு சேர்ந்து பயணிச்சார். எடப்பாடியும் கழக சட்ட விதிகள், அமைப்புரீதியான பணிகள்ல அனுபவம் வாய்ந்த செம்மலைக்கு முக்கியத்துவம் தந்து வச்சிருந்தார்.

இந்த சூழல்ல 2019 நாடளுமன்றத் தேர்தல்ல போட்டியிட செம்மலை சீட் கேட்டார். எடப்பாடியோ, 2021 சட்டமன்றத் தேர்தல்ல உங்க மகனுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன்’னு சொல்லியிருந்தார். ஆனா, செய்யல தனக்கும் செய்யல, தன்னோட மகனுக்கும் செய்யலங்கிற கோபம் எடப்பாடி மேல செம்மலைக்கு இருந்தது. ஆனா, அதை பெருசா வெளியில காட்டிக்காம சைலன்ட் மோடுக்கு போனார்.

பிறகு 2026 தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க.விலிருந்து விலகிட்டார். எடப்பாடியோட செயல்பாடுகளை கடுமையா விமர்சனம் செய்து வெளியேறுன செம்மலை, ‘இனி அரசியலே வேண்டாமினுதான் இருந்தார். ஆனா செம்மலை வீட்ல, அவர் தவெகவில் சேர்ந்தா மகனோட அரசியல் எதிர்காலத்துக்கு உதவும்னு சொல்லியிருக்காங்க. அது சரின்னு படவே, லோக்கல் தவெக அமைச்சர் பார்த்திபனை பார்த்திருக்கிறார்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட செங்கோட்டையனும், ‘லோக்கல் அமைச்சர் சப்போர்ட் உங்களுக்கு தேவை. அவரையே ஃபாலோ பண்ணுங்க’ன்னு சொல்லிட்டார். அதுபடி, அமைச்சர் பார்த்திபனை ஃபாலோ பண்ணி, அவர் மூலமாவே தவெசுடவில் இணைஞ்சார் செம்மலை.

அதுக்கப்புறம் செங்கோட்டையன் செம்மலைக் கிட்ட, ‘ஓ.பி.எஸ். டீம்ல நீங்க இருந்தப்போ சேலத்துல II முன்னாள் எம்.எல்.ஏக்களை ஒருங்கிணைச்சீங்க அதே மாதிரி இப்ப செய்யணும். அ.தி.மு.க. பழைய முக்கியஸ்தர்களை எல்லாம் தூக்கி எடப்பாடிக்கு செம்ம அடி கொடுக்கணும். அதுக்கான வேலையைப் பாருங்க. மத்ததை நான் பார்த்துக்கிறேன்’ன்னு சொல்லியிருக்கார்.

அதுபடி, செம்மலையும் இப்போ பழைய அதிமுக ஆளுங்கக்கிட்ட பேச்சுவார்த்தையை தொடங் கிட்டார். கண்டிப்பா இனிவரும் நாட்கள் எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுக்கும் நாட்களா இருக்கும்” என்றார்கள். செம்மலையிடம் இதுபற்றி கேட்டதற்கு சிரித்தவர். ‘இப்பதான் கட்சியில சேர்ந்திருக் கிறேன். அப்புறம் விரிவா பேசுகிறேன்” என்றார்.

இதுபற்றி அ.தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சேலம் செல்வராஜிடம் கேட்டோம். ‘செம்மலையால யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர் எங்கிருந்தா என்னங்க!” என்றார்.
பார்ப்போம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *