“அவரை யார் தடுத்தா?” -கங்கனா ரனாவத் பதில் |Kangana Ranaut Hits Back at Kriti Sanon Over Rakhi Ad Outfit Row

Spread the love

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிருதி சனோன், “பண்டிகைகளின் முக்கியத்துவம் நாம் அணியும் ஆடையில் இல்லை. அந்தப் பாரம்பரியத்தின் உணர்வுகளில்தான் இருக்கிறது.

பெண்களுக்கு என்ன ஆடை அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்? பண்பாடும் பாரம்பரியமும் இதயத்தில் இருக்க வேண்டுமே தவிர, உடைகளின் கழுத்துப்பகுதியில் அல்ல” எனக் காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

கிருதி சனோனின் இந்த பதிலுக்கு தற்போது மீண்டும் பதிலடி கொடுத்துள்ள கங்கனா ரனாவத், “அவர் என்ன ஆடை வேண்டுமானாலும் அணியலாம், அவரை யார் தடுத்தது? இன்றைய நவீன பெண்ணுக்குப் பல ஆடை தேர்வுகள் உள்ளன.

ஆனால் பாரம்பரியமான ஒரு நிகழ்வின்போது எது பொருத்தமான ஆடை என்ற கேள்விதான் எழுகிறது” எனக் கூறியிருக்கிறார்.

இந்த ஆடை விவாதம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பரவவே, சம்பந்தப்பட்ட அந்த நகை நிறுவனம் அந்த விளம்பரத்தை அனைத்துத் தளங்களிலிருந்தும் உடனடியாக நீக்கியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *