‘அவர் இந்த பாதையில் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகிறேன்.!’- முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த சமந்தா | actress samantha meets cm vijay

Spread the love

நடிகை சமந்தா முதல்வர் விஜய்யை இன்று (ஜூன். 17) நேரில் சந்தித்திருக்கிறார். இதனை நெகிழ்ச்சியாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

புகைப்படத்துடன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இன்று நான் சென்னையில் தரையிறங்கியபோது, எனக்குள் ஒரு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. நான் நம்முடைய முதலமைச்சரைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தேன்.

விஜய் சார் எப்போதுமே திரையில் மட்டும் கதாநாயகனாக இருக்க வேண்டியவர் இல்லை என்று நான் நினைப்பதுண்டு.

முதல்வர் விஜய் - நடிகை சமந்தா

முதல்வர் விஜய் – நடிகை சமந்தா

அவருடைய ஆற்றல், அவருடைய ஆளுமை மற்றும் மக்கள் அவர் மீது காட்டும் அன்பு ஆகிய அனைத்தும், அவர் இதைவிடப் பெரிய ஏதோ ஒன்றிற்காகவே உருவாக்கப்பட்டவர் என்பதை உணர்த்தி இருக்கின்றன.

எல்லாவற்றையும் விட அவரிடம் அதிகமாக ஈர்ப்பது எதுவென்றால், ஒரு புதிய களத்தில் கால்பதிப்பதற்குத் தேவைப்படும் அந்தத் துணிச்சல்தான்.

ஏற்கெனவே நாம் சாதித்து, முத்திரை பதித்த ஒரு துறையை விட்டுவிட்டு, சவால்களும் பொறுப்புகளும் மிக அதிகமாக உள்ள ஒரு புதிய களத்தைக் கையில் எடுப்பது சாதாரண விஷயமல்ல. அது எளிதானது என்பதால் அல்ல, மாறாக நம்மால் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையினால்தான் அவர் அதைச் செய்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *