நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றில் தோல்வியடைந்திருந்தாலும் அந்த அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
15 வயதான சூர்யவன்ஷி 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதம் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார்.
இதில் 63 பவுண்டரியும், 72 சிக்சரும் அடங்கும். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்திருக்கும் சூர்யவன்ஷி விராட் கோலி குறித்து பகிர்ந்திருக்கிறார்.
விராட் கோலி குறித்து பேசிய அவர், “நான் முன்பு ஆர்சிபி அணியின் ரசிகனாக இருந்தேன். சொல்லப்போனால், நான் விராட் கோலியின் தீவிர ரசிகன்.