மீண்டும் மோதும் ஈரான், இஸ்ரேல்: 'இப்போது ஆரம்பித்தது ஈரான்தான்' – காரணம் என்ன?

Spread the love

கடந்த ஏப்ரல் மாதப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய நேரப்படி, இன்று ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

போர் நிறுத்தம் என்பது ஈரானில் மட்டுமல்ல… லெபனானிலும் இருக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளது ஈரான்.

ஆனால், அதை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்குப் பதிலடி தருவது போல, ஏப்ரல் மாதம் நிறுத்திய இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தற்போது தொடங்கியுள்ளது ஈரான்.

ஈரான் போரை நிறுத்தத்தை நோக்கி நகர்த்துவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக முயற்சித்து வருகிறார்.

ஈரானை தாக்கிய இஸ்ரேல்
ஈரானை தாக்கிய இஸ்ரேல்

இந்த நேரத்தில் இஸ்ரேல், ஈரானைத் தாக்கினாலோ, ஈரான், இஸ்ரேலைத் தாக்கினாலோ போர் மீண்டும் முற்றும்.

இதனால், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் ஈரான் உங்களைத் தாக்கினாலும், நீங்கள் அவர்களைத் தாக்காதீர்கள். இப்போது போர் நிறுத்தத்தை நெருங்கிவிட்டோம்.

எந்தவொரு தாக்குதலும் பிரச்னையைப் பெரிதாக்கும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்தத் தகவலை அமெரிக்க செய்தி நிறுவனம் Axios வெளியிட்டுள்ளது.

ஆனாலும், தற்போது இஸ்ரேலும் ஈரானைத் தாக்கித்தான் வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *