தமிழ்நாட்டில் தற்போது கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.
விலை உயர்வு…
M Sand – ஒரு யூனிட்டின் விலை தற்போது ரூ.900 ஆக உயர்ந்துள்ளது. இதன் முந்தைய விலை ஒரு யூனிட்டிற்கு ரூ.650 – 700.
P Sand – ஒரு யூனிட்டின் விலை தற்போது ரூ.1,000 ஆக உயர்ந்துள்ளது. இதன் முந்தைய விலை ஒரு யூனிட்டிற்கு ரூ.800.
ஜல்லி – ஒரு யூனிட்டின் விலை தற்போது ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. இதன் முந்தைய விலை ஒரு யூனிட்டிற்கு ரூ.450 – 500.

விலை உயர்விற்கு என்ன காரணம்?
சமீபத்தில், தமிழ்நாட்டில் சட்டவிரோத குவாரிகள் சீல் வைக்கப்பட்டன. அதனால், முன்பிருந்த உற்பத்தி அளவு தற்போது இல்லை.
அதனால், M Sand-க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே அளவு தேவையும் ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போது கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.