“அவர் கொடுக்கும் மரியாதையும் என்னை பிரமிக்க வைத்தது!” – அபெக்ஷா போர்வல் |”The respect he shows left me in awe!” – Apeksha Porwal

Spread the love

அந்தப் பேட்டியில் அவர், “திரையில் சூப்பர் ஸ்டாராகக் கோலோச்சும் ரஜினி சார், நேரில் எவ்வளவு எளிமையான மனிதர் என்பதை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் நடந்துகொள்ளும் விதமும், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதையும் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது.

இத்தனை ஆண்டு கால அனுபவமும், உலகளவில் இவ்வளவு பெரிய புகழும் இருந்தபோதிலும், ஸ்பாட்டிற்கு வந்துவிட்டால் முழு அர்ப்பணிப்போடு பணிபுரிவார்.

Apeksha Porwal - Jailer 2

Apeksha Porwal – Jailer 2

என்னிடம் ரொம்பவே அன்பாகப் பேசி, எனக்கு ஊக்கமளித்தார். திரையில் அவருடைய அந்த அசாத்தியமான மாஸ் மேஜிக்கை நேரிலேயே பார்த்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.

‘ஜெயிலர் 2’ படத்தில் அவருடன் நடித்ததை என் திரைப் பயணத்தின் மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதுகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *