”அவர் தாங்க எதிர்க்கட்சித் தலைவரு…” – உதயநிதிக்கு ஆதரவாக இபிஎஸ்…! – Kumudam

Spread the love

தஞ்சையில் நேற்று(ஆகஸ்ட் 03) திமுக சார்பில் காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து நட்த்தப்பட ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜயையும், நடிகையையும் இணைத்து ஆபாசமாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், இன்று (ஆகஸ்ட் 04) எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதோடு, சட்டப் போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளனர். உதயநிதியின் கைதுக்கு ஆதரவாக தவெகவினர் ஸ்வீட்ஸ் கொடுத்து கொண்டாடி வரும் நிலையில், அவரது கைதை எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். 

அந்தவகையில், எப்போதுமே எலியும் பூனையுமாக வார்த்தை மோதலில் ஈடுப்பட்ட வந்த நிலையில், தற்போது உதயநிதியின் கைதை கண்டித்து பதிவிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய உதயநிதி காவல்துறை கைது செய்திருக்கிறது. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைது செய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.

அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

இந்த நிலையில், எடப்பாடியின் இந்த பதிவை கண்டு, “நாம் காண்பது என்ன கனவா? நிஜமா?” என்று திமுகவினரே ஷாக்காகியுள்ளனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *