அஸ்ஸாம்: விமானப்படை விமானம் விழுந்து 5 வீரர்கள் பலி; முதல்வர் ஹிமந்தா சொல்வது என்ன? | 5 personnel killed in Air Force plane crash in Assam

Spread the love

அஸ்ஸாமில் மாநிலம் ஜோர்ஹட் விமானப்படைத்தளத்தில் இன்று விமானப்படை விமானம் AN-32 தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.

விபத்தில் விமானத்தில் இருந்த விமானப்படை வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விமானம் இரண்டாக உடைந்து தீப்பிடித்தது.

சம்பவ இடத்தில் இருந்து கரும்புகை வெளியானது. விபத்தில் பைலட் இறந்துவிட்ட நிலையில் இணை பைலட் காயத்துடன் உயிர் தப்பினார். தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா சர்மா அளித்த பேட்டியில், “‘ஜோர்ஹட் விமான நிலையத்தில் ஒரு விமானப்படை சரக்கு விமானம் தொழில்நுட்ப பிரச்னைகளால் விபத்தில் சிக்கியது.

இது குறித்து விசாரித்து வரும் துணை ஆணையரின் கூடுதல் விவரங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.

விபத்து குறித்து கோர்ட் விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

இறந்தவர்கள்

இறந்தவர்கள்

அதோடு விபத்தில் 5 பேர் உயிரிழந்து இருப்பதை விமானப்படை உறுதிபடுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்த பணியாளர்கள் பிரசாந்த் சிங், சுபம் குமார், ஜிதேந்திர சர்மா, அக்னிவீர் குமாவத் மற்றும் டேனிஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏஎன்-32 விமானம் அஸ்ஸாமின் ஜோர்ஹட்டில் இன்று காலை வழக்கமான பயணத்தின்போது விபத்துக்குள்ளானது என்று விமானப்படை தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் AN-32 தீவிர சூழல்களில் மிகவும் உயரமான மலைப்பகுதியில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் 7.5 டன் சரக்குகள், 50 பயணிகள் அல்லது 42 விமானப்படை வீரர்கள் வரை பயணம் செய்ய முடியும். மேலும் இது தொலைதூரப் பகுதிகளில் பொருட்களை எடுத்துச்செல்ல பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *