எங்க மகன் ஹரிஹரனுக்கு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். சின்ன வயதில் இருந்தே ஹரிஹரனுக்கு பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம்.
இதற்காகத் தொடர்ந்து கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வந்தான். கடந்த 2017-ஆம் ஆண்டு ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் ஹரிஹரன் வெற்றி பெற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.

மேலும், தேசிய அளவிலான இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாடு சார்பில் ஹரிஹரன்–ரூபன் ஜோடி பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். தொடர்ந்து சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வரும் ஹரிஹரன், இந்தியாவுக்காக மேலும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றுள்ள என் மகன், வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்காகப் பங்கேற்று பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும், பிறந்த ஊர் மன்னார்குடிக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இதுதான் எங்களின் எதிர்பார்ப்பு. இதுதான் அவனுடைய அடுத்த இலக்கு” என்றார்.
மன்னார்குடியில் இருந்து சென்று சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றுள்ள ஹரிஹரனுக்குப் பாராட்டுக்குள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.