“ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் மராத்தி கற்க ஒரு வருடம் அவகாசம்” – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு | Maharashtra Government Grants Auto and Taxi Drivers One Year to Learn Marathi

Spread the love

எனவே அவர்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மராத்தி மொழி தெரியாத ஓட்டுநர்கள் மீது இக்காலகட்டத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது”‘ என்று பட்னாவிஸ் தெளிவுபடுத்தினார்.

பயணிகளுடனான அன்றாட உரையாடல்களுக்குத் தேவைப்படும் பொதுவான சொற்றொடர்களை ஓட்டுநர்கள் கற்றுக்கொள்ள உதவும் வகையில், மராத்தி மொழி வகுப்புகளை நடத்தவும், அதற்கான பாடக்குறிப்புகளை வழங்கவும் அரசு தற்போது முடிவு செய்துள்ளது.

பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு அடிப்படை மராத்தி மொழித் திறன் அவசியம் என்ற அரசின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் அதே வேளையில், ஓட்டுநர் சங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்க முதலமைச்சரின் தலையீடு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சிகள் மண்ணின் மைந்தர்கள் கோரிக்கையைக் கையில் எடுத்து மும்பை மாநகராட்சி தேர்தலைச் சந்தித்தது.

அதனை எதிர்கொள்ள துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கட்டாயம் மராத்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவைக் கொண்டு வந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *