ஆட்டோ வாங்கி கொடுத்தும் திருந்தாத குடிகாரக் கணவன் – சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?! | intense interrogation of the husband in the case of a policewoman’s murder in vellore district

Spread the love

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அர்வின் (45) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தாமரைச்செல்வியின் மாமன் மகன்தான் அர்வின். நெருங்கிய உறவினர் என்பது மட்டுமில்லாமல், ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த தம்பதிக்கு 12 வயதில் பிரித்விராஜ், 10 வயதில் கௌதம் என்று இரு மகன்களும், 4 வயதில் லட்சுமிதேவி என்று ஒரு மகளும் உள்ளனர்.

தனது கணவன் அர்வின் வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் ஆட்டோ வாங்கிக் கொடுத்திருக்கிறார் தாமரைச்செல்வி. அப்போதும் பகல் நேரங்களில் மது குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டாமல் இருந்திருக்கிறார். இரவிலும் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததால் தாமரைச்செல்வி கோபமடைந்திருக்கிறார். இருவரும் அடிக்கடி சண்டைப் போட்டிருக்கின்றனர்.

பெண் போலீஸ் ஏட்டு தாமரைச்செல்வி

பெண் போலீஸ் ஏட்டு தாமரைச்செல்வி

இந்த நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பு தாமரைச்செல்வியின் பெற்றோர் தங்களின் விவசாய நிலத்தில் வேர்க்கடலை சாகுபடி செய்திருக்கின்றனர். அதனருகில், தாமரைச்செல்வியின் கணவரின் குடும்பத்துக்குச் சொந்தமான நிலமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், இருக் குடும்பத்துக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

வேர்க்கடலை சாகுபடியின்போது, மீண்டும் தகராறு ஏற்பட்டதால் தனது மாமனார் – மாமியாரிடம் தனது பெற்றோருக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம் தாமரைச்செல்வி. இதனால், `வீட்டுப் பக்கம் வராதே. உங்க அப்பா, அம்மா கூடவே போய்டு’ என்று மாமியார் திட்டியதால், கோபித்துக்கொண்டு அதே பகுதியிலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம் தாமரைச்செல்வி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *