ஆதார் பெயர் திருத்தம்: UIDAI-யின் புதிய விதிகள் மற்றும் தேவையான ஆவணங்கள்|Aadhaar Name Wrong? New UIDAI Rules Explain How to Fix It

Spread the love

திரும்பத் திரும்பச் சொல்வதுபோலத்தான், இப்போது அனைத்திற்குமே ஆதார் கார்டு மிக முக்கியம் என்றாகிவிட்டது.

ஏதேனும் அத்தியாவசியத் தேவையின் போது, தவறான தரவுகள் உள்ள ஆதார் கார்டு நம்முடைய காலை வாரிவிடலாம். இதனால், இப்போதே உஷாராகிவிடுங்கள்.

ஆதார் கார்டில் உள்ள நமது பெயர் எப்படி இடம்பெற வேண்டும்… அதில் ஏதேனும் எழுத்துப்பிழை இருந்தால், அதை எப்படிச் சரிசெய்ய வேண்டும் என்பதற்கான நடைமுறையைக் கடந்த மாதம் UIDAI வெளியிட்டுள்ளது.

ஆதார் கார்டு

ஆதார் கார்டு

அதன்படி,

> ஆதாரில் இடம்பெற்றுள்ள பெயர் ‘பிளாக்’ எழுத்தில் இடம்பெற வேண்டும். திரு, திருமதி, செல்வி, டாக்டர், பேராசிரியர், கலெக்டர் போன்ற பெயரைத் தவிர எந்தவொரு எக்ஸ்ட்ரா தகவலும் இடம்பெற முடியாது.

> ஆதாரில் பெயர் மாற்றம் ஆதார் (பதிவு மற்றும் புதுப்பித்தல்) ஒழுங்குமுறைகள், 2016-ன் ஒழுங்குமுறை 19 படி மேற்கொள்ளப்படுகிறது. பெயர் மாற்றத்திற்குப் பிரிவு 2-ல் இடம்பெற்றிருக்கும் ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும்.

அந்த ஆவணங்களில் எப்படிப் பெயர் இடம்பெற்றிருக்கிறதோ, அப்படித்தான் ஆதார் கார்டிலும் இடம்பெறும். அதாவது, எழுத்துகள், பெயரின் விரிவாக்கங்கள், முதல் பெயர், இடைப்பெயர், இறுதிப்பெயர் என எந்த வரிசையில் அமர்ந்திருக்கிறதோ, அந்த வரிசையில்தான் சமர்பிக்கும் ஆவணங்களை ஒத்துத்தான் ஆதாரில் பெயர் இடம்பெறும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *