ஆந்திராவுக்கு போவதாக கூறப்பட்ட கொரிய நிறுவனங்கள்.. தமிழகத்தில் 1,370 கோடி முதலீடு செய்ய உறுதி! | Amid AP Shift Buzz, Two Korean Firms Commit ₹1,370 Crore to Tamil Nadu

Spread the love

Business

oi-Velmurugan P

சென்னை: தமிழகத்தில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் கொரிய நிறுவனங்கள் ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு இடம்பெயர்வதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஹ்வாஷின் (Hwashin), சியோயான் (Seoyon) ஆகிய நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ.1,370 கோடி முதலீடு செய்ய உறுதியளித்துள்ளன. த.வெ.க. அரசு விரைவில் நடத்தவுள்ள முதலீட்டு ஒப்பந்தங்கள் இறுதி செய்யும் மாநாட்டில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த இரண்டு வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களான சியோயான் இ-ஹ்வா சம்மிட் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஹ்வாஷின் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், நேற்று தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவைச் சந்தித்து, மாநிலத்தில் முதலீடு செய்வதில் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன

Korea Tamil Nadu

இரு நிறுவனங்களின் அதிகாரிகளும் மாநிலத்தில் முதலீடு செய்யும் தங்கள் நோக்கத்தை வெளிப்படுத்தி கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர். மேலும், வரவிருக்கும் டி.வி.கே. அரசின் முதலீட்டு மாற்ற மாநாட்டில் ஒரு முறையான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்விரு நிறுவனங்களும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) மற்றும் பிற முன்னணி வாகன OEM நிறுவனங்களுக்கு முக்கிய விநியோகஸ்தர்களாக உள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் ரூ.1370 கோடியில் இரண்டு நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிக்கை வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், “சில நேரங்களில், ஊகங்களுக்கான சிறந்த பதில் முதலீட்டாளர்களே எழுதும் கடிதமாகத்தான் இருக்கும்.

தமிழகத்தின் நீண்டகாலக் கூட்டாளிகளான ஹ்வாஷின் (Hwashin), சியோயான் (Seoyon) நிறுவனங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,370 கோடி புதிய முதலீடுகளைச் செய்வதன் மூலம் தமிழகத்தின் மீதான தங்களது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Korea Tamil Nadu

மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில், தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையவும், புதுமைகளைப் புகுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஏற்ற சூழலை உருவாக்குவதிலேயே எங்கள் கவனம் தொடர்ந்து இருக்கும். போட்டியை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரத்தில், எங்களது வேகத்தைக் குறைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.

தமிழகத்தில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் தேர்வு செய்பவர்களே தமிழகத்தின் வளர்ச்சிக் கதையைச் சிறப்பாகச் சொல்பவர்கள். எங்களது முதலீடுகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். மற்றவர்கள் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்துக்கொண்டிருக்கலாம்” இவ்வாறு அமைச்சர் கீர்த்தானா கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *