“நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் சிறந்த பங்களிப்பை அள்ளித் தருவது நம்முடைய கடமை!” – ஜான்வி கபூர் |”It is our duty to give our very best in every opportunity that comes our way!” — Janhvi Kapoor

Spread the love

அந்த வரிசையில் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஜான்வி கபூர் பேசுகையில், “ஒரு நடிகையாக எனக்கு சவால் விடும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் எப்போதும் ரசிப்பேன்.

நமக்கு பழகமில்லாத வித்தியாசமான கதாபாத்திரங்களில் சோதனை முயற்சிகளைச் செய்யும்போதுதான், அது நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், கரியர் வாழ்க்கையிலும் வளர்ச்சிக்கு உதவுகிறது.

இது எனக்குள் ஒரு பெரிய ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. என்னுடைய இந்த வேலையிலேயே எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், நம்முடைய கம்ஃபோர்ட் ஜோன் விட்டு வெளியே வந்து புதிய விஷயங்களை எக்ஸ்ப்ளோர் செய்வதுதான்.

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

நாம் உண்மையில் யார் என்பதை நாம் தெரிந்துகொள்ளும் அந்தத் தருணத்தில்தான், ஒரு கலைஞராக நாம் இன்னும் வளர முடியும். திரைத்துறையில் இருக்கும் பிரஷர் குறித்து அதிகமாக யோசித்துக்கொண்டிருக்காமல், என்னுடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்த நான் விரும்புகிறேன்.

இதனை நான் ஒரு அழுத்தமாகப் பார்க்காமல், என்னுடைய பொறுப்பாகவே பார்க்கிறேன். ரசிகர்கள் நடிகர்களாகிய நமக்குக் கொடுக்கும் அன்பிற்கு நாம் எப்போதும் மதிப்பளிக்க வேண்டும்.

நாம் எந்தவொரு வேலையைச் செய்தாலும், நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் நம்முடைய மிகச் சிறந்த பங்களிப்பை அள்ளித் தருவது நம்முடைய கடமை” எனத் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *