ஆந்திர அமைச்சர் லோகேஷ் நாரா கிண்டல்; அமைச்சர் கீர்த்தனா பதிலடி!|‘Fast Action Matters More!’ Tamil Nadu Minister Hits Back at Lokesh Nara

Spread the love

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திரா பக்கம் மடைமாறுவது சமீபத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஆந்திரா அமைச்சர் கிண்டல்

இந்த நிலையில், நேற்று (நவம்பர் 20) ஆந்திரா அமைச்சர் லோகேஷ் நாரா தனது எக்ஸ் பக்கத்தில், “பிரேக்கிங்: ஆந்திரப் பிரதேசத்தின் அதிர்ச்சியூட்டும் ரகசிய முதலீட்டு வியூகம் லீக் ஆகிவிட்டது!

அதன் பெயர் தான் ‘முதலீட்டாளர்களுக்கு அன்றே பதில் அளிப்பது’. தாராளமாக இதை நீங்களும் காப்பி அடித்துக்கொள்ளலாம்” என்று கேலி செய்வதுபோல பதிவிட்டிருந்தார்.

கீர்த்தனா பதில்

கீர்த்தனா பதில்

கீர்த்தனா பதில்

லோகேஷ் நாராவிற்குப் பதிலளிப்பதுபோல, தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில், “விரைவான பதில்கள் நல்லதுதான்; ஆனால், அதைவிட வேகமான செயல்பாடு? அதைவிடச் சிறந்தது!

தமிழ்நாடு, ‘வெற்றி’ முதலீடு மற்றும் செயல்பாட்டு மாநாடு 2026-ன் இரண்டாவது பதிப்பிற்குத் தயாராகி வருகிறது!

நமது இலக்கு மிகத் தெளிவானது: முதலீட்டு ஒப்பந்தங்கள், அவற்றைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரும் மைல்கற்கள், களத்தில் இறங்கும் திட்டங்கள் மற்றும் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *