பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. முதல்வர் ஆவதற்கு முன்பு பிரசாரத்தின் போது தனது முதல் மக்கள் சந்திப்பை விஜய் ஏகனாபுரத்திலேயே நடத்தியிருந்தார். அப்படியிருக்க, விஜய் முதல்வர் ஆகியிருக்கும் நிலையில் பரந்தூர் மக்கள் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் செயலாளர் கதிரேசனிடம் பேசினோம். அவர் கூறுகையில், “முதல்வர் விஜய் மக்களை சந்திக்கும் அரசியல் பயணத்தையே எங்கள் ஊரில்தான் தொடங்கியிருந்தார். அப்போது, ‘விமான நிலையம் வேணாம்னு சொல்லல, விளைநிலங்கள் நிறைஞ்சிருக்க இந்த பரந்தூர், ஏகனாபுரத்துலதான் வேணாம்னு சொல்றேன்.