ஆன்லைன் மது விற்பனை இல்லை: அமைச்சர் விக்னேஷ் விளக்கம்|Tamil Nadu Minister Clarifies TASMAC Digital Payment Rollout

Spread the love

தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்தக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ்.

அவரிடம் ஆன்லைன் மதுபான விற்பனை உள்ளிட்ட டாஸ்மாக் சம்பந்தமான பல கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகளுக்கு அவருடைய பதில்கள்…

ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படுவதாக வரும் செய்திகள் தவறானவை. அது ஆன்லைன் விற்பனை கிடையாது. அது ஒரு டிஜிட்டல் பேமென்ட் முறை மட்டுமே.

ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ கசிந்ததால், “ஹோம் டெலிவரி’ என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் எந்தக் கடையில் என்னென்ன மதுபான வகைகள் இருப்பில் உள்ளன என்பதை மக்கள் வெளிப்படையாகத் தெரிந்து கொள்ளலாம். இது அரசு நிர்வாகத்திலும், கடைகளிலும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும்.

மதுபான விலையை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. விலையை உயர்த்தி வருவாயைப் பெருக்குவதை விட, இந்தத் துறையில் பல ஆண்டுகளாக நடக்கும் ஊழல்களைக் கண்டறிந்து தடுத்தாலே, அரசுக்கான வருவாய் தானாகவே அதிகரிக்கும். கடந்த ஆண்டு ரூ.51,000 கோடியாக இருந்த வருவாய் இலக்கை, இந்த ஆண்டு ரூ.55,000 கோடியாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *