
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஒருநாள் போட்டிகள் வருகிற 13, 17, 20-ந் தேதிகளில் தர்மசாலா, லக்னோ, சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஒருநாள் போட்டி அணியில் தேர்வாகியிருந்த விராட் கோலி காயம் காரணமாக விலகி இருக்கிறார். ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்றிருந்தாலும், அவர்களின் பங்கேற்பு முழுமையாக உடல்தகுதியைப் பொறுத்தே இருக்கும் என்று பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் கூறியிருந்தார்.
இந்த இரு வீரர்களும் அணியுடன் இணையும் முன், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்புத் திறன் மையத்தில் (CoE) நடைபெறும் உடல்தகுதிப் பரிசோதனையில் தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், இதுவரை ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள மையத்திற்கு வரவில்லை. இதனால் இருவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை பங்கேற்க மாட்டார்கள் என கூறப்பட்டது.
இந்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் உடல்தகுதிப் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் இருவரும் ஒருநாள் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.