விசா இருந்தும் அமெரிக்காவில் அனுமதி மறுப்பு! – உலகக் கோப்பை வாய்ப்பை இழந்த சோமாலிய நடுவர் | Somali referee dropped from World Cup

Spread the love

பாதுகாப்புப் பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாகவே அவர் அனுமதிக்கப்படவில்லை என்று அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. சோமாலியா உள்ளிட்ட சில நாடுகள் மீது தற்போதைய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஃபிஃபா, ” போட்டியை நடத்தும் நாட்டின் (Host Country) குடிவரவு மற்றும் விசா நடைமுறைகளில் பிஃபா தலையிட முடியாது. தற்போதைய சூழ்நிலையில் ஓமர் அர்தானின் விசா அந்தஸ்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளது.

ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பால் (CAF) 2025 ஆம் ஆண்டின் சிறந்த ஆண் நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓமர் அர்தானுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது சோமாலிய அரசு மற்றும் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “விளையாட்டின் நேர்மை மற்றும் சமத்துவக் கொள்கைகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கை இது” என்று சோமாலிய விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *