ஆப்சென்ட் திமுக; ஒரே ஒரு அதிமுக எம்.எல்.ஏ வருகை!- எம்.எல்.ஏ பயிற்சி கூட்டத்துக்கு வந்த கட்சிகள் எவை?

Spread the love

புதிய எம்.எல்.ஏக்கள் மட்டுமல்லாமல் அனைத்து எம்.எல்.ஏக்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளலாம் என சபாநாயகர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று தொடங்கிய பயிற்சி கூட்டத்தில் தவெக எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் முழுமையாக கலந்துகொண்டனர். அதேமாதிரி, விசிக சார்பில் அமைச்சர் வன்னி அரசு, ஐ.யூ.எம்.எல் யைச் சேர்ந்த அமைச்சர் ஷாஜகான், காங்கிரஸை சேர்ந்த அமைச்சர் மேலூர் விஸ்வநாதன் போன்றோர் கலந்துகொண்டிருந்தனர்.

எம்.எல்.ஏக்கள் கூட்டம்

எம்.எல்.ஏக்கள் கூட்டம்

அதேமாதிரி, அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமக சார்பில் சௌமியா அன்புமணி, பாஜக சார்பில் போஜராஜன் போன்றோரும் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

திமுக சார்பில் எந்த எம்.எல்.ஏக்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் மதிமுக சார்பிலும் கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பிலும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவின் பிரிவினர் கூட கூட்டத்துக்கு வரவில்லை. ஆனால், சங்கராபுரத்தில் வென்ற அதிமுக எம்.எல்.ஏ ராகேஷ் மட்டும் ஒரே ஒரு அதிமுக-காரராக கூட்டத்துக்கு வந்திருந்தார்.

கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களுக்கும் இந்த கூட்டத்தை தவிர்த்திருந்தனர்.

காலை 10:30 மணிக்கு தொடங்கிய பயிற்சி கூட்டம் மாலை 5:30 மணி வரை நடக்கிறது. நாளையும் பயிற்சி கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *