”50 வருடங்களுக்கு திமுக துடைத்து எறியப்படும்”-அமைச்சர் ஷாஜஹான் பேச்சு; கொதிப்பில் திமுக-வினர்!

Spread the love

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ஷாஜஹான், முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி தொடர்ந்தால் இன்னும் ஐந்து வருடத்திற்கு அல்ல ஐம்பது வருடங்களுக்கு திமுக துடைத்து எறியப்படும் என்று பேசியியிருந்தார். இது குறித்த வீடியோ வைரலாக… திமுக-வினர் கொதிப்படைந்தனர். திமுக தயவில் வெற்றி பெற்று விட்டு திமுக-வை விமர்னம் செய்யும் ஷாஜகானே மன்னிப்பு கேள் என கடும் சொற்களை பயன்படுத்தி திமுக-வினர் கும்பகோணம், பாபநாசம் பகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

திமுக போஸ்டர்

திமுக போஸ்டர்

மேலும் ஷாஜகானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தலைமையிடம் லோக்கல் திமுக-வினர் அனுமதி கேட்டிருப்பதாக சொல்லபடுகிறது. போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது குறித்து ஷாஜஹான் தரப்பு போலீஸ் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், சிசிடிவி பதிவுகளை அடிப்படையாக வைத்து ஒட்டியவர்கள் யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருதாகவும் சொல்கிறார்கள். இந்த விவகாரத்தால் தஞ்சாவூர் மாவட்ட அரசியல் வட்டத்தில் அனல் பறக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *