iPhone 18 Pro-வில் 6.3 இன்ச், Pro Max-ல் 6.9 இன்ச் Super Retina XDR display உள்ளது. இரண்டு மாடல்களிலும் A20 Pro chip மற்றும் 18MP Centre Stage front camera இடம்பெற்றுள்ளன.
முக்கியமாக, 48MP Fusion Main Camera-வில் Variable Aperture வசதி அறிமுகமாகியுள்ளது. Pro Controls மூலம் Aperture, Shutter Speed, White Balance போன்ற Camera settings-ஐ கூடுதல் கட்டுப்பாட்டுடன் மாற்ற முடியும். மூன்று 48MP கேமராக்களைக் கொண்ட Pro camera system-மும் உள்ளது. iPhone 18 Pro Max-ல் 43 மணி நேரம் வரை Video Playback கிடைக்கும்.
இந்தியாவில் iPhone 18 Pro விலை ₹1,64,900-ல், Pro Max விலை ₹1,79,900-ல் தொடங்குகிறது. செப்டம்பர் 18 முதல் விற்பனை தொடங்குகிறது.
Apple Watch Series 12 மற்றும் Ultra 4-ல் புதிய Health Sensing System, அதிக frequency-யில் Heart Rate/HRV கண்காணிப்பு மற்றும் Readiness Score ஆகியவை முக்கிய அம்சங்கள். Ultra 4-ல் 45 மணி நேரம் வரை Max Extended Workout tracking கிடைக்கிறது.
AirPods 5-ல் Open-ear design உடன் Active Noise Cancellation வழங்கப்பட்டுள்ளது. AirPods 4-ஐவிட 50% அதிக வெளிப்புற இரைச்சலை குறைக்கும் என Apple கூறுகிறது. இந்தியாவில் ₹14,900-ல் தொடங்குகிறது.
மொத்தத்தில், இத்தனை ஆண்டுகளாக Foldable சந்தையில் களமிறங்காமல் இருந்த Apple, இப்போது iPhone Duo மூலம் அந்தப் போட்டியில் தடம் பதித்திருக்கிறது. ₹3 லட்சத்தை நெருங்கும் விலையில் வரும் இந்த மடிக்கக்கூடிய iPhone, சந்தையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதுதான் இனி பார்க்க வேண்டிய விஷயம்!