ஈசன் அம்பிகையைத் திருமணம் செய்துகொண்ட தலத்தில் சுயம்வர பார்வதி ஹோமம்… திருமணம் கைகூடும்! | swayamvara parvathi homam at kuttalam

Spread the love

உலக சுகபோகங்களுக்கு அதிபதி சுக்ரன். அவரின் நிலையின் காரணமாக ஜாதகத்தில் கல்யாண தோஷ பாதிப்புகள் இருக்குமாயின், வெள்ளிக்கிழமையில் இந்திரனையும், சசிதேவியையும் வழிபடுவது நல்லது. அன்றைய நாளில் சுமங்கலி பூஜை செய்வதும் மிக விசேஷம்.

நவகிரகங்களில் புதனின் நிலையானது ஜாதகத்தில் கல்யாணத் தடைகளுக்குக் காரணமாக இருந்தால், மகாவிஷ்ணு வழிபட்டுப் பலன் பெறலாம். புதன்கிழமைதோறும் மகா விஷ்ணுவை வழிபடுவதுடன், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மை தரும். ஏகாதசி விரதம் இருப்பது மிகவும் சிரேஷ்டமான பரிகாரம் ஆகும்.

கல்யாணத் தடைக்கு சர்ப்ப கிரகங் களும் காரணம் ஆகலாம். அப்படியான ஜாதகர்கள், ராகு ப்ரீதிக்கு காலன், சர்ப்பேஸ்வரன் ஆகியோரை வழிபடுவதும் உளுந்து தானம் செய்வதும் நல்லது.

தோஷம் எதுவாக இருந்தாலும் அதைத் தீர்க்கும் ஹோம வழிபாடு ஒன்று உண்டு. அதுதான் சுயம்வர பார்வதி ஹோமம். அன்னை பார்வதி ஈசனை அடைய மேற்கொண்ட வழிபாடு இது என்பார்கள். இதற்கான மந்திரங்களை பிரம்ம தேவரே உருவாக்கிக்கொடுத்தார் என்பது ஐதிகம். அதன்படி இந்த சுயம்வர பார்வதி ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்தாலே கிரகதோஷங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

ஶ்ரீசுயம்வர ஹோமத்தில் கலந்துகொள்ள முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *