ஆம்ஆத்மியைத் தொடர்ந்து தாக்கரேயின் சேனாவிற்கு BJP குறி: டெல்லியில் உத்தவ் MP-கள் தனியாக ஆலோசனை?!

Spread the love

இதற்கான நகர்வுகள் டெல்லியில் வேகமாக நடந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், புதுடெல்லியில் மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் கொடுத்த ஒரு விருந்தில் ஹிங்கோலியைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.க்கள் நாகேஷ் பாட்டீல் அஷ்திகர் மற்றும் யவத்மால்-வாஷிம், சஞ்சய் தேஷ்முக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, சஞ்சய் ஜாதவ் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்புகள் அரசியல் சார்பற்றவை என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறினாலும், “ஆபரேஷன் டைகர்” என்ற திட்டத்தின் கீழ் ஏக்நாத் ஷிண்டே இதற்கான வேலையில் ஈடுபட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த செய்தியை ஏக்நாத் ஷிண்டே மறுத்து வருகிறார். ஏக்நாத் ஷிண்டே பிரிவைச் சேர்ந்த தலைவர்கள் சமீப காலமாக சிவசேனா (உத்தவ்) எம்.பி.க்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக வெளியாகும் செய்திகளை பகிரங்கமாக மறுத்து, அவை ஆதாரமற்றவை என்று கூறி வருகின்றனர்.

அதே சமயம் , இந்த எம்.பி.க்களில் சிலரை ஷிண்டே கோஷ்டி மூலம் அணுகாமல், பாஜக தலைமை நேரடியாக அணுகியிருக்கலாம் என்று டெல்லி வட்டாரத்தில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

சஞ்சய் ஜாதவ்

சஞ்சய் ஜாதவ்

டெல்லியில் எம்.பி.க்கள் தனியாக சந்தித்து பேசி இருப்பது உத்தவ் தாக்கரேவுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது கட்சி தலைமை சரியாக தேர்தல் பிரசாரத்தில் பங்களிப்பு வழங்கவில்லை என்று உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.க்கள் அதிருப்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி.க்கள் 7 பேர் பா.ஜ.கவிற்கு தாவினர். அவர்களைத் தொடர்ந்து இப்போது உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.க்களுக்கு பா.ஜ.க வலை விரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *