“ஆய்த எழுத்து படம்தான் நான் டைரக்டர் ஆகக் காரணம்!” – சூர்யா குறித்து அருண்ராஜா காமராஜ் |Viswanath & Sons Audio Launch: Arunraja Kamaraj Speech

Spread the love

அவரைத் தொடர்ந்து அருண்ராஜா காமராஜ் பேசுகையில், “என்னோட லைஃப்ல இந்த பெரிய ஈவென்ட்டை முதல் முதல்ல கொடுத்து, பாடலாசிரியரா வாய்ப்புக் கொடுத்தது ஜி.வி. சார் தான்.

நான் டைரக்டரா இருக்குறப்போ எனக்கு பாடலாசிரியராக வாய்ப்புக் கொடுத்ததும் ஜி.வி. சார் தான். என்னை ஜி.வி. சார் முழுசா நம்புவாரு. ‘ஃபையர் விடுற பாட்டுலாம் வேணாம், பட்டாம்பூச்சி மாதிரியான பாட்டு குடு’னு ஜி.வி. சொன்னாரு. அதுதான் ‘பட்டாம்பூச்சி’ பாடல்.

Arunraja Kamaraj - Viswanath & Sons Audio Launch

Arunraja Kamaraj – Viswanath & Sons Audio Launch

நான் சினிமாவில் டைரக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டதுக்கு பெரிய காரணம் சூர்யா சார் நடிச்ச ‘ஆய்த எழுத்து’ படம்தான். எல்லா நேரமும் எனக்கு இன்ஸ்பிரேஷனா இருக்குறது சூர்யா சார்தான்.

எனக்கு மட்டும் இல்ல, எல்லாருக்குமே சூர்யா சார் இன்ஸ்பிரேஷன்தான். இந்தப் படம் எனக்கு முக்கியமான படம். காலேஜ் படிக்கிறப்போ சூர்யா சார் லுக்கெல்லாம் இமிடேட் பண்ணுவேன். எல்லோரும் ஹீரோதான்னு எண்ணத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கியவர் அவர்தான்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *