ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து.. நீதான்யா தரமான ஓபனர்.. ஜெய்ஸ்வால் ஆட்டம் ஏன் சிறந்தது? | Yashasvi Jaiswal Missed a Century against New Zealand in 1st Test, But proved his batting skills in SENA countries

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 89 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து பவுலர்களை சமாளிக்க டவுன் தி டிராக் இறங்கி வந்து ஜெய்ஸ்வால் ஆடியது சேவாக்கின் ஆட்டத்தை நினைவுபடுத்தியதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 2வது நாளில் இந்திய அணியின் பேட்டிங் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 368 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய நிக்கல்ஸ் 175 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

Yashasvi Jaiswal

இதன்பின் இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் – ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் 8 ஓவர்களில் கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இருவருமே அமைதியோ அமைதி என்று பொறுப்புடன் விளையாடினர். வெறும் 16 ரன்களை மட்டுமே சேர்த்து 2வது செஷனை நிறைவுக்கு கொண்டு வந்தனர். இதன்பின் 3வது செஷன் ஆட்டம் தொடங்கியது.

அப்போது இந்திய அணியின் தொடக்க வீரர்கள், இது எங்களுக்கான நேரம் என்று விளாச தொடங்கினர். மேட் ஹென்றியின் லெந்தை மாற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் கொஞ்சம் டவுன் தின் டிராக் இறங்கி வந்து பவுண்டரியை விளாசியது வியப்பை ஏற்படுத்தியது. இதன்பின் ஹென்றி அட்டாக்கில் இருந்து வெளியேற, ஜேக்கப் டஃபி கொண்டு வரப்பட்டார்.

அவரை கொஞ்சம் கூட ஜெய்ஸ்வால் செட்டிலாக விடவில்லை. தொடக்கம் முதலே ஓவருக்கு 2 பவுண்டரிகளை விளாசினார். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 66 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன்பின் ஜெய்ஸ்வாலின் ஆட்டம் உச்சத்தில் இருந்தது. டி20 மோடில் பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். இவரை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து பவுலர்கள் ஒரு வழியாகிவிட்டனர்.

சிறப்பாக ஆடிய அவர் 89 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஜெய்ஸ்வாலின் ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. ஏனென்றால் நியூசிலாந்து மண்ணில் முதல் 20 ஓவர்களை கடந்துவிட்டால், பேட்ஸ்மேன்களால் சிறப்பாக ரன்கள் சேர்க்க முடியும். இதனால் இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை முதல் இன்னிங்ஸில் பெறும் என்று நம்பப்படுகிறது.

அதேபோல் ஜெய்ஸ்வால் ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக ஆடி சாதனைகளை படைத்துவிட்டார். ஆஸ்திரேலியாவில் சதம் மிஸ்ஸாகி இருந்தாலும், இந்திய அணிக்காக அதிக ரன்களை விளாசினார். அதேபோல் இங்கிலாந்து சதம் அடித்ததோடு, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தற்போது நியூசிலாந்து மண்ணில் முதல் இன்னிங்ஸிலேயே சாதனை படைத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *