‘இஞ்சி வெல்லம்’ எப்ப ரிலீஸ் தெரியுமா ? காதல் காவியத்தின் மூலம் COMEBACK கொடுப்பாரா மணிரத்னம் ! – Kumudam

Spread the love

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2027 ஜனவரி 29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கணவன் – மனைவியாக விஜய் சேதுபதி, சாய் பல்லவி!

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதல் முறையாக ஜோடியாக நடித்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டரில், விஜய் சேதுபதியும் சாய் பல்லவியும் கணவன் – மனைவியாகவும், இரண்டு பெண் குழந்தைகளின் பெற்றோராகவும் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த போஸ்டர் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, மணிரத்னத்தின் காதல் திரைப்படங்களில் இடம்பெறும் உணர்வுப்பூர்வமான காட்சிகளை மீண்டும் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கொல்கத்தா பின்னணியில் உருவாகும் காதல் கதை!

‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் கொல்கத்தாவில் நடைபெற்றது. ஹவுரா பாலம், ஜகந்நாத் காட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி படப்பிடிப்பில் ஈடுபட்ட வீடியோக்கள் அப்போது சமூக வலைதளங்களில் வைரலாகின.

மேலும், படத்தின் முதல் டீசரில் கொல்கத்தாவின் தெருக்கள், டிராம்கள், உள்ளூர் ரயில்கள் மற்றும் நகரத்தின் கலாச்சார பின்னணிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் கொல்கத்தா நகரமே இப்படத்தின் கதையில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மணிரத்னத்தின் ‘யுவா’ திரைப்படத்திலும் கொல்கத்தா நகரத்தின் பின்னணி கதையின் முக்கிய அம்சமாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஏ.ஆர். ரஹ்மானுடன் மணிரத்னம்!

மணிரத்னத்தின் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் தனித்துவமான பங்களிப்பை வழங்கி வரும் ஏ.ஆர். ரஹ்மான், இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். இதனால் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஒளிப்பதிவை அவீக் முகோபாத்யாய் மேற்கொள்ள, படத்தொகுப்பை ஏ. ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார். ஆடை வடிவமைப்பில் ஏகா லகானி, கலை இயக்கத்தில் ஷர்மிஷ்டா ராய் பணியாற்றுகின்றனர்.

‘தக் லைஃப்’ தோல்விக்குப் பிறகு Comeback கொடுப்பாரா மணிரத்னம்?

மணிரத்னத்தின் கடைசி திரைப்படமான ‘தக் லைஃப்’ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால், அடுத்ததாக அவர் இயக்கும் திரைப்படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், விஜய் சேதுபதி – சாய் பல்லவி கூட்டணியில் உருவாகும் ‘இஞ்சி வெல்லம்’ ஒரு முதிர்ச்சியான, உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்களை படக்குழு இன்னும் ரகசியமாக வைத்துள்ளது.

மணிரத்னத்தின் தனித்துவமான காதல் காட்சிகள், ஏ.ஆர். ரஹ்மானின் இசை, விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்பு, சாய் பல்லவியின் உணர்வுப்பூர்வமான நடிப்பு என அனைத்தும் இணையும் இப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வரும் 2027 ஜனவரி 29-ம் தேதி வெளியாகவுள்ள ‘இஞ்சி வெல்லம்’, மணிரத்னத்திற்கு COMEBACK கொடுக்கும் வெற்றிப் படமாக அமையுமா? அவரது காதல் திரைப்படங்களின் வரிசையில் மற்றொரு அழகான காவியமாக இடம்பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *