Business
oi-Velmurugan P
சென்னை: கடந்த ஒரு மாதமாக எனது eKYC-ஐப் புதுப்பிக்க முயற்சித்து வருகிறேன், ஆனால் ஒவ்வொரு முறையும் செயலி தோல்வியடைகிறது. கட்டணமில்லா தொலைபேசி எண் எப்போதும் இயங்கவில்லை. முதியவர்களால் நேரில் சென்று இதைச் செய்வது சாத்தியமில்லை. அதேவேளையில், இணைப்பு துண்டிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் தொடர்ந்து வருகிறது. தயவுசெய்து ஆலோசனை கொடுங்கள் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தினை டேக் செய்து நெட்டிசன் ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த ஒரு மாதமாகத் தனது எல்.பி.ஜி எரிவாயு கணக்கிற்கு eKYC புதுப்பிக்க முயன்றும், இண்டேன் செயலி ஒவ்வொரு முறையும் செயலிழந்து விடுகிறது என்பது பெரும்பாலான வாடிக்கையாளர்களின் கருத்தாக உள்ளது. கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிற்கு அழைத்தால் எப்போதும் வேலை செய்யாமல் ‘Out of order’ என்றே வருகிறதாம். வயதானவர்களால் கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்று வரிசையில் நின்று eKYC செய்ய முடியாத நிலை இருக்கிறது. eKYC செய்யாவிட்டால் கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தொடர்ந்து எச்சரிக்கை/மெசேஜ் வந்துகொண்டே இருக்கிறது. இதற்கு உடனடியாக ஒரு நல்ல தீர்வோ வழிகாட்டலோ தர வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுபற்றி நெட்டிசன்களின் சிலரது பதில்களை பார்ப்போம். நண்பரே, நீங்கள் இண்டேன் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் டெலிவரி ஊழியர்களிடம் அதற்கான இகேஒய்சி கைபேசிச் செயலி இருக்கும். அவர்கள் வீட்டிற்கு சிலிண்டர் கொண்டு வரும்போதே, பயோமெட்ரிக்/ரேகை அல்லது முகத்தை ஸ்கேன் செய்து 2 நிமிடத்தில் eKYC செய்து கொடுத்துவிடுவார்கள் என்றார்கள். இன்னொரு நெட்டிசன் கூறும் போது, நேரடியாக நீங்கள் கேஸ் ஏஜென்சிக்கு செல்வதே சிறந்த வழியாக இருக்கும்.அங்கு செல்லும் போது, ஆதார் கார்டு நகலையும், நுகர்வோன் எண்ணையும் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் மொபைல் எண்ணும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஒரு நிமிடத்தில் வேலை முடிந்துவிடும் என்று நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.
அதேபோல் சில நெட்டிசன்கள் ஆன்லைனில் எப்படி தவறு இல்லாமல் பதிவு செய்வது தெளிவுப்படுத்தி உள்ளனர். IndianOil One ஆப்பில் நீங்கள் சிலிண்டர் ஏஜென்சியில் பதிவு செய்த மொபைல் எண்ணைக் கொடுத்தால் OTP கேட்கும். அதனை வைத்து உள்ளே செல்ல வேண்டும். உள்ளே சென்றால், ‘e-KYC Update’ என்ற ஆப்ஷனைக் காட்டும். அதைக் கிளிக் செய்தால், Aadhaar FaceRD என்ற ஆப்பை டவுன்லோடு செய்யுமாறு கேட்கும். அதை டவுன்லோடு செய்து உள்ளே சென்றால், உங்கள் கேஸ் சிலிண்டர் செயலி நேரடியாக Aadhaar FaceRD செயலியுடன் இணையும்.
அப்படி இணைந்த பின்னர் உங்கள் மொபைலின் கேமரா ஓபன் ஆகும். அதன்பின்னர் அந்தக் கேமரா முகத்தைச் ஸ்கேன் செய்து உறுதிப்படுத்தும். அதன்பிறகு ‘e-KYC நடவடிக்கை நிறைவுற்றது’ என்று தகவல் வரும். அப்படி வந்தால்தான் e-KYC முடிந்துவிட்டதாக அர்த்தம்.
eKYC செய்வது கட்டாயமா?
அரசு மற்றும் எரிவாயு நிறுவனங்கள் eKYC செய்ய அவகாசம் கொடுத்துள்ளன. உடனடியாக கேஸ் இணைப்பு துண்டிக்கப்படாது என்பதால் பயப்படத் தேவையில்லை. ஆனால் முடிந்தவரை eKYC செய்வது நல்லது.

