இதயம் முரளி: "'ராஜா ராணி'க்குப் பிறகு லவ் படம் எடுக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது" – அட்லீ

Spread the love

‘டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகும் ‘இதயம் முரளி’ திரைப்படம் ஜூலை 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் அட்லீ இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டார்.

இதயம் முரளி படத்தில்...
இதயம் முரளி படத்தில்…

இந்த நிகழ்வில் அவர் பேசுகையில், “இந்த ‘இதய முரளி’ படத்தின் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் என்னுடைய தம்பி. எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறான். வயதில் சின்ன பையனாக இருந்தாலும், அவனிடம் பொறுப்பு அதிகம்.

ரொம்ப நாட்களாக ஒரு கதையை வைத்துக் கொண்டு படம் பண்ண வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தான். ‘நானே தயாரிக்கிறேன்’ என்று சொன்னேன். ஆனால், அவன் என்ன நினைத்தானோ, ‘உங்களை விட நான் இன்னும் பெட்டராக தயாரிப்பேன்’ என்று அவனே தயாரித்து, இப்போது படத்தை முடித்துவிட்டான்.

படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘ராஜா ராணி’ படத்திற்குப் பிறகு என்னால் ஒரு காதல் படம் பண்ண முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் எப்போதும் இருக்கும்.

ஏனென்றால், இன்று நான் எங்கு போனாலும் எல்லாரும் முதலில் பேசும் படம் ‘ராஜா ராணி’தான். அதன் பிறகு தளபதி விஜய்யை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்த படங்கள் செய்தேன்” என்றவர், “‘இதயம் முரளி; ஆகாஷின் பயோபிக்தான்.

இதில் வரும் ஃபஹத் பாசில் கதாபாத்திரம்தான் நிஜ வாழ்க்கையில் நான். நான் அதர்வாவின் மிகப்பெரிய ரசிகன்.

அவரின் எல்லா படங்களும் எனக்குப் பிடிக்கும். இந்த ‘இதய முரளி’ திரைப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய ஸ்ட்ரைக்கராக அமையும்.

அட்லீ
அட்லீ

அதேபோல், நடிகை ப்ரீத்தி முகுந்தனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்களது நடனம், நடிப்பு எல்லாமே அமேசிங். நான் என் அடுத்த படத்தில் நடிப்பதற்காக இவரிடம் கேட்டேன். ஆனால், அவர் ‘முடியாது, நான் ஆகாஷ் படத்தில் பிஸியாக இருக்கிறேன்’ என்று கூறி நோ சொல்லிவிட்டார்.

கயாடு லோகர் மிக அருமையாக நடித்திருக்கிறார். அவர் கூடிய சீக்கிரமே ஒரு ‘நேஷனல் கிரஷ்ஷாக’ மாறுவார் என்று எனக்குத் தோன்றுகிறது.

இயக்குநர் ஜீவா சார் படங்களான ‘உள்ளம் கேட்குமே’, ‘உன்னாலே உன்னாலே’ போன்ற படங்களில் ஜீவா – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் ஒரு அழகான லவ் ஃபீல் வரும்.

அதேபோல இந்தப் படத்தில் ஆகாஷ் – தமன் கூட்டணி ஒரு அழகான ஃபீலைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

காதல் என்பது நம் அம்மா நமக்குக் குழந்தையாக இருக்கும்போதே, விவரம் தெரிவதற்கு முன்பே சொல்லிக் கொடுத்த விஷயம். எத்தனை தலைமுறைகள் மாறினாலும் உலகம் மாறினாலும் காதல் மாறாது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *