வந்தே மாதரம் முதலிடம், தமிழ்த்தாய் கடைசி இடம்! நெல்லை பல்கலை பட்டமளிப்பில் கொந்தளிப்பு | Manonmaniam Sundaranar University Convocation: Tamil Thai Vazhthu Row Sparks Controversy

Spread the love

இதற்கிடையில், பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் வரிசையை மாற்றக் கூடாது என்று வலியுறுத்தி, நேற்று திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் மாணவர் அமைப்புகள், மாதர் சங்கம் மற்றும் எழுத்தாளர் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரிலேயே இயங்கும் பல்கலைக்கழகத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதியில் பாடுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், பட்டமளிப்பு விழாவில் அதன் பாரம்பரியத்தையும் மரியாதையையும் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் இன்றைய மட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்க்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை.

ஒருபுறம் பட்டம் வழங்கும் நடைமுறையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்த, மறுபுறம் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இரண்டு முக்கிய சர்ச்சைகளால் பேசுபொருளாக மாறியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *