இந்நிலையில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கண்கலங்கியவாறு பேசி, படத்தின் ரிலீஸ் பற்றி ஒரு காணொளி வெளியிட்டிருக்கிறார்.
அந்தக் காணொளியில், “காரில் இருந்து நான் கொடுக்கக்கூடிய கடைசி அப்டேட் இதுதான்னு நம்புறேன். என்னை மன்னிச்சிடுங்க. இது நடந்திருக்கக்கூடாது. படத்தை பார்ப்பதற்காகப் பல தூரம் பயணித்து வந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
படம் பார்க்குறதே நம்ம மனசுல, வீட்டுல இருக்குற, வாழ்க்கையில இருக்குற பிரச்சினையில இருந்து வெளிய வர்றதுக்குத்தான். ஆனா அந்தப் படம் பார்க்குறதே அவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸா, அவ்வளவு தூரம் டிராவல் பண்ணி, அதுவும் பார்க்க முடியாம போனதுக்கு ஐயாம் ரியலி சாரி.
நானும் இதை எதிர்பார்க்கல. நான் நம்பிக்கையோட இருக்கேன். இன்னைக்கு மாலை 6 மணியில இருந்து இந்தப் பிரச்சினை எல்லாம் முடிஞ்சு, படம் ரிலீஸ் ஆகும்னு நம்புறேன்.

மே 14-ஆம் தேதி ‘கருப்பு’. ரிலீஸ் ஆகிப் பெரிய பிளாக்பஸ்டர் ஆகும்னு மேனிஃபெஸ்ட் பண்ணிருக்கேன்.” எனக் கண்கலங்கியவர், “அழுகை வருது. அது வலி. அது வேற டிபார்ட்மென்ட். கடவுள் இதைக் கடத்தி இந்தப் படத்தை இன்னைக்குச் சாயங்காலம் ரிலீஸ் பண்ணிக் கொடுப்பாரு.
தாமதத்திற்கு மன்னிக்கவும், காத்திருப்புக்கு வொர்த்தானதாக இந்தப் படம் இருக்கும். தாமதத்திற்கு, இத்தனை விஷயங்களை நீங்கள் கடக்க வைத்ததற்கும் மன்னித்துவிடுங்கள். படம் நல்லா இருக்கும் உங்களுக்குப் பிடிக்கும்னு நம்பிக்கை இருக்கு.” எனக் கூறியிருக்கிறார்.