“இது மக்களாகிய உங்களின் படம்; நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்றால்.!”- தனுஷ் | “This is your film, the people’s film. Let me tell you why I say that!” – Dhanush

Spread the love

விக்னேஷ் ராஜா தயாரிப்பில், தனுஷ், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “கர’.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ‘கர’ படத்தின் தெலுங்கு ப்ரி ரிலீஸ் ஈவென்ட் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், ” இது நான் நடித்த படமோ, விக்னேஷ் ராஜா எடுத்த படமோ, தயாரிப்பாளரின் படமோ கிடையாது.

இது மக்களாகிய உங்களின் படம். நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்.

மக்களின் பிரச்னையை சரியான வழியில் சொல்லும் படம் தான் ‘கர’ . இது மக்களுக்கான படம். ரிலீஸுக்கு முன்பு நான் ரொம்ப நம்பிக்கையுடன் சில படங்களை பற்றி பேச மாட்டேன்.

இந்த படம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னை நம்பி தியேட்டருக்கு செல்லுங்கள். இந்தப் படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *