“இதைவிட வேறு என்ன வேண்டும்? ஒரு தந்தையாக.!”- கண்கலங்கிய விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்| S.A. Chandrasekhar about tvk vijay victory

Spread the love

234 தொகுதிகளில், தற்போதைய நிலவரப்படி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் த.வெ.க முன்னிலை வகித்து வருவது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

த.வெ.க தலைவர் விஜய்யின் இந்த வெற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவரது தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் “ஒரு தந்தையாகப் பெருமைகொள்கிறேன்.

தவெக - விஜய்

தவெக – விஜய்

சந்தோஷமாக இருக்கிறது. இதைவிட வேறு என்ன வேண்டும்? விஜய் வெற்றியை மக்கள் கொண்டாடுகிறார்கள். விஜய்யை குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்கள் பார்க்கிறார்கள். இது சாதாரண வெற்றி கிடையாது.

எதிர்ப்புகளைத் தாண்டி விஜய் வெற்றி பெற்றிருக்கிறார். “எந்த ஒரு ஊழல்வாதிகளுடனும் கூட்டணிக்குப் போகமாட்டேன். தனியாக நின்று மக்களுக்கு நல்லது செய்வேன்’ என விஜய் சொல்லி தனியாக நின்றதே பெரிய விஷயம்.

எவ்வளவோ எதிர்ப்புகளையும், சோதனைகளையும் தாண்டி விஜய் வெற்றி பெற்றிருக்கிறார்” என்று எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *